நான்
உன் பாதங்கள் முத்தமிடும் வாசலில் கோலமாய் நான்...! உன் வளையல்கள் சத்தமிடும் கைகளில் பாடலாய் நான்...! உன் தோட்டத்தில் மொட்டவிழும் பூக்களில் வாசமாய் நான்...! உன் மூட்டத்தில் மெல்லவிழும் மேகத்தின் தூறலாய் நான்...! உன் ஊசியில் கோர்த்த நூல் நான்...! உன் வாசகம் யாத்த நூல் நான்... உன் பார்வைகள் வீசிடும் தீ நான் ... உன் வார்த்தைகள் சிந்திடும் தேன் நான் ... உன் பக்கத்தில் நானொரு நாய்தான்... உன் அன்பிற்கு அழுதிடும் சேய் நான்....!

