[364 ] மாற்றம் தேவை...
மாற்றம் தேவை
முகங்களில் அல்ல..
அகங்களில்..
காட்சியில் அல்ல
ஆட்சியில்..
எண்ணத்தில் அல்ல
திண்ணத்தில்..
யுக்தியில் அல்ல
சித்தியில்..
ஊக்கத்தில் அல்ல
ஆக்கத்தில்..
வாக்கினில் அல்ல
நோக்கினில்
ஆளலில் அல்ல
ஊழலில்....
அணியினில் அல்ல
பணியினில்..
தேர்தலில் அல்ல
தேர்வினில்..
++++ !!!! ++++++