ஒரு பட்சியின் கூக்குரல்!

நீ என்னிடம்
உளமார உரையாடி
வெகு நாட்களாகி விட்டது
என்று உன்
உள் மனதிற்கு
மறக்க
ஞாயமில்லை!
வானத்துப்பறவை
நிலவை
தொட எண்ணியதாக
தவறாக நினைத்துகொண்ட
கதியில் இருக்கிறேன்.
உன் பாதை அழகியலை
நோக்கிய பயணம் என்றே
பிறிதொரு தருணத்தில்
புரிந்துக்கொண்டேன்.
நீ புறப்பட்ட எதிர்
திசையில்
ஒரு புள்ளியில்
அகப்பட்டவள்
நான்.
அந்த சன நேர
சந்திப்பு
எப்போதும்
சாத்தியமில்லை
என்றாலும்
வேறு ஒரு
திசையில்
நீ எப்போதாவது
அகப்படுவாய் என
என்னுள் கேட்கிறது
ஒரு பட்சியின் கூக்குரல்!


சிவகங்கா

எழுதியவர் : சிவகங்கா (29-Oct-12, 4:31 pm)
சேர்த்தது : sivaganga
பார்வை : 134

மேலே