!!!"மன மாங்கல்யம்"!!!
சுற்றங்கள் சூழவில்லை -நாம்
குற்றங்கள் புரியவில்லை ,
எட்டுத்திசை உறவில்லை ,
ஏழடியெடுத்து வைக்கவுமில்லை.
"இருமனம் இணைந்ததால்".
அம்மி அரசானையில்லை,
அருந்ததி பார்க்கவில்லை ,
ஆலோடு மாயில்லை ,
அய்யர் வரவுமில்லை,
அச்சதையும் தூவவில்லை.
.
பத்துப்பொருத்தம் பார்க்காமல்,
மந்திரங்கள் ஓதாமல்,
மாங்கல்ய முடிச்சிட்டு
மானசீக பந்தமானோம் -நம்
மனப் பொருத்தத்தால் .