காதல் வாழும் உலகம்

காதல் இல்லா உலகம் நினைத்தேன்

காற்றே இல்லா நிலையை உணர்ந்தேன்
மலர்கள் இல்லா சோலை கண்டேன்
மனிதம் எல்லாம் மண்போல் அறிந்தேன்
மனம் முழுவதும் கொடூரம் புறிந்தேன்

காதல் வாழும் உலகம் நினைத்தேன்

கண்களின் எதிரே வானவில் கண்டேன்
காண்பவை எங்கும் அழகே கண்டேன்
மனிதம் என்பதன் மகத்துவம் புறிந்தேன்
மண்ணிலே அனைத்துமே இன்பமாய் கண்டேன்

எழுதியவர் : (30-Oct-12, 11:09 pm)
பார்வை : 170

மேலே