தோழி
பத்து வருட தோழியாய்
பார்த்து பார்த்து பழகினோம்
பாசப் பறவைகளாய்!!
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்தே இருந்தோம்
எப்பொழுதும்!!
செல்லும் இடமெல்லாம்
சேர்ந்தே சென்றோம்
ஒன்றாக!!
சிறு சிறு வார்த்தை
வாதங்கள் வருவதுண்டு
செல்லும் நொடியை
நானறியேன்!!
பின்னொரு நாளில்
வானம்பாடியாய் பறந்தாள்
இதயத்தை விட்டல்ல
இருப்பிடத்தை விட்டு
இனிய
நினைவுகளை அலசி
கனத்த இதயத்துடன் நான்...............