புரிதல் இல்லாக் காதல்

காதலைப் பற்றி
கவிதை எழுதும்
விடலைப் பருவப்
பெண்களும், ஆண்களும்;

அவ்ர்கள் எண்ணங்கள்
சிறுபிள்ளைத் தனம்;

'உன் மயிர்க் கற்றையாக
இருக்க வேண்டும்' என்றொருவன்;

'கவித்தாரகையை
துகிலுரிப்பேன்' என்றொருவன்;

'வானவில்'லாக
வர்ணிக்க ஒருவன்;

'கண் திறந்து பார்த்தேன்
"நாசமாய் போறவள்"
கணவனோடு வந்தாள்...!' என்றொருவன்;

'எனக்கு பொன்னகை வேண்டாம்...!! - உன்
புன்னகை ஒன்றே போதுமடா'
என்பாள் ஒருத்தி;

''இதயவாசல் துடித்துக் கொண்டு
இருப்பதாக' இன்னொருத்தி;

'கானல் நீரானதே உன் அன்பு
அன்பே...!!' என்ற பெண் ஒருத்தி;

'தொலைந்து போன என் வாழ்க்கையை
தேடிவந்துள்ளேன்' என்றொருத்தி;

புரிதல் இல்லாக் காதல்
புரிந்தபின் மிஞ்சுவது ஏமாற்றமே!

கல்லறை, மலர் வளையம் என்ற
சோக கீதமே!


(இதுபோல நிறைய சேர்த்துக் கொண்டே போகலாம்)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Nov-12, 10:23 pm)
பார்வை : 189

மேலே