பசுமை நினைவுகள்

காலச் சக்கரத்தின் முன் பகுதியும்
காணாமல் போன நட்புகளும்
ஆசிரியர்களிடம் கிடைத்தப் பாராட்டுகளும்
மீண்டும் ஒருமுறை நெஞ்சில்
பசுமை நினைவோட்டத்தை ஏற்படுத்தின
அலமாரியில் நீண்ட வரிசையில்
நின்றபுத்தகத்தைத் துசித் தட்டுகையில்
வசந்தக்காலத்தையும் சேர்த்து துசித்தைடியது
எதிர்பாராமல் விழுந்த அன்றையநாட்குறிப்பேடு
இன்றைய நினைவேடாகக்கண்ணில்பட்டப்போது;

மின்விசிறினால் திருப்பப்பட்ட பக்கங்களில்
அங்குமிங்குமாய் ஆடிகொண்டிருந்த
ஒரு பக்கத்தை வாசிக்க
அழகியநினைவில் மனம் சஞ்சயரித்துவிட்டது
முதல் பள்ளித்தோழியின் பரிவும்
அவள் காட்டியப்பாசமும்; அதனால்
நான் பதித்த எழுத்துக்களும்
கண்ணீராக மாற ..
கருப்பு மையால் தீட்டப்பட்ட
பக்கத்தின் எழுத்துக்கள் நீராடின

அந்தப் பழைய நினைவுச் சின்னம்
வாழ்கையில் கிடைத்த முதல்நடப்பையும்
துள்ளித்திரிந்த அழகிய வாழ்க்கையையும்சேர்த்து
மந்திரம் தந்திரமில்லாமல் என்னை
என் காலத்தைத் திரும்பிப்பார்க்க வைத்தன
அருவண்ணக்காட்சியாக நின்ற நினைவுகள்
சத்தமில்லாமல் யுத்தம் செய்தன
இப்படி பக்கத்திற்கு ஓர் நினைவைத் தந்து சிந்தனைத்தொடர்வண்டியில் தன் பயணத்தைத் தொடர்ந்தது நாட்குறிபேட்டின் ஓவ்வொருப்பக்கங்களிலும் அமைதியாய்...

எழுதியவர் : harihari (3-Nov-12, 10:20 pm)
பார்வை : 167

மேலே