இதயம் தின்னும் பேய்கள்
சலிப்புக்கு இடமில்லை
வார்த்தைகளும் , பார்வைகளும்
இதயம் தின்னப்பட்டு விட்டது
செல்லரித்த புகைபடம்
போல
ஆங்காங்கே இதயம் தின்னப்பட்டு விட்டது
சிறு சிறு காயங்கள் ஏதுமின்றி
இதயம் தின்னப்பட்டு விட்டது
கசித்த இரத்தம் காயபடுவரை
இதயம் தின்னபட்டுவிட்டது
எருபுகள் தின்று மிதமான
தின்பண்டம்போல
இதயம் தின்னப்பட்டு விட்டது
நாய்கள் மிச்சம் வாய்த்த
எச்சில் போல
இதயம் தின்னப்பட்டு விட்டது
அவள் இதயம் தின்னும் பேய்
அவள் மீது வருத்தம் ஏதுமில்லை
இதை
அவளிடம் சொல்ல போவதுமில்லை
அவள் மீது ஏவப்பட்ட பேய்
அவளை தின்னும் வரை
என் இதயமும் எப்படி தான் தின்னபட்டது என்று !