என் இலக்கணம்

எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்

ஏழன் உருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச்
சாரியைக் கிளவி இயற்கையு மாகும்
ஆவயின் இறுதி மெய்யொடும் கெடுமே

ஒன்று முதலாகப் பத்துஊர்ந்து வரூஉம்
எல்லா எண்ணும் சொல்லுங் காலை
ஆன்இடை வரினும் மானம் இல்லை
அஃதுஎன் கிளவி ஆவயின் கெடுமே
உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே

யாதுஎன் இறுதியும் சுட்டுமுத லாகிய
ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும்
ஆய்தம் கெடுதல் ஆவயி னான

அவைதாம்
இயற்கைய வாகும் செயற்கைய என்ப

நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்
அப்பால் மொழிகள் அல்வழி யான

குற்றிய லுகரத்து இறுதி முன்னர்
முற்றத் தோன்றும் இன்என் சாரியை.

எழுதியவர் : பெ.செந்தில் (5-Nov-12, 6:48 am)
பார்வை : 233

மேலே