கதை எழுத தெரியாதவன்

கதை/கவிதை என எதையுமே சரியாக எழுத
தெரியாத புதிய எழுத்தாளன்தான் பரமகுரு,எப்படியாவது ஒரு அழகான 1 -நிமிட கதைகளை 30 நாட்களுக்குள் எழுதிவிட வேண்டும் என்று தினமும் முயற்சிதான்,எதை எழுதினாளும் எதாவது குறை வந்துவிடும்,வார்த்தைகள் வலுவின்றி கதை கரு மாறிப்போகும்.இப்படியே 7 -நாட்கள் கழிந்தது.

திடேரென அவனுக்கு ஒரு சமோயோகேதின புத்தி உதயமாயிற்று.தினமும் அவன் சந்திக்கும் உண்மை நிகழ்வுகளை கற்பனை முலாம் பூசி,பெயர்களை மாற்றி எழுத தொடங்கினான்.இப்படியே 30 நாட்களும் கழிந்தன.இருபதற்கும் மேற்பட்ட கதைகள் எழுத முடித்தான்.

பல வார பத்திரிக்கைகளுக்கும் அனுப்பி வைத்தான்.இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவன் முதலில் எழுதி முடித்த "கதை எழுத தெரியாதவன்" என்ற தலைப்பை மூன்றிற்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் பாராட்டி கடிதம் அனுப்பியது பிரசுரமும் ஆனது.பின்னொரு நாளில் அந்த கதையின் தலைப்பே இவனுக்கு அடைமொழி ஆகிற்று.

காலங்கள் கடந்தது எழுத்தாளன் ஆனான்,தன்னாலும் சிறுகதை எழுத முடியும் என்று அவன் கர்வப்ப்பட்டான்.அப்போது தான் அந்த வாசகரை சந்தித்தான்.அவர் யார் தெரியுமா? உங்கள் பெயர்தான் அது!

நன்றி
"கதை எழுத தெரியாதவன்" - பரமகுரு க

எழுதியவர் : பரமகுரு க (5-Nov-12, 8:41 pm)
பார்வை : 570

மேலே