எதுவரை..................................

வாழத்தான் நினைத்தேன்
உன்னுடன் ஆயுள் வரை!
வாழ்வில் யோகம் தான்
கிட்டவில்லை இறுதிவரை.....

சொல்லத்தான் தவித்தேன்
இதயத்துடிப்பின் மொழிபெயர்ப்பை!
சொல்லாமலே புதைத்தேன்
இதமாய்ச் சுடும் உன் நினைவுகளை.....

உனக்காகத்தான் காத்திருந்தேன்
விதி சதி செய்யும் வரை!
உள்ளத்தால் அழுகிறேன்
விழிநீர் வெளியே வராத படி ......

எழுதியவர் : MIZHIMA (COLOMBO) (6-Nov-12, 1:49 am)
சேர்த்தது : mizhim
பார்வை : 244

மேலே