உன் நினைவுகளுடனே ........

நிஜமாகவே நீ இல்லைஎன்ற போதும்
நினைவுகளின் இருப்பிடம்
என்னை மட்டும்- என்னிடம்
திருப்பித் தரவில்லை......
உன்னை மட்டும் விட்டுத்தர
எனக்கு மனமேயில்லை......

நாட்களின் நீளம்- நீ
தூரமாய் சென்றபோது
மிக நன்றாகவே தெரிகிறது......
இறந்த காலத்தின் -கருமையானஇரவுகளின்
இறந்த நினைவுகளோடு -என்
மனம் தேங்கி நின்று விட்டது.....

வரமாகவே நீ கிடைத்த
காலம் சொல்லும்;
வாழவும் சாகவும்- என் இதயம் இன்னமும்
உன் மடி கேட்கும் ஊமை வாசகம்.....

உன்னை மறுத்த போதும்
மறக்கவில்லை...
கல்லறை செல்லும் வரை காதலி
உன் நினைவு தவிர வேறொன்றும்
என்னிடம் எச்சமில்லை.........
-MIZHIMA-

எழுதியவர் : MIZHIMA (COLOMBO) (6-Nov-12, 12:42 am)
பார்வை : 381

மேலே