சீக்கிரம் வா என் அன்பே

நீ என்னை பிரிந்த பின்னும் நான் ஆனந்தமாக இருக்கிறேனா.?

எங்கே என் கண்களை கொஞ்சம் கேட்டு பார்?

தனிமையில் அது உன்னை நினைத்து சிந்திய துளிகள் எத்தனை என்று சொல்லும்...

உன்னை பிரிந்த பின்னும் என் இதயம் துடிக்கிறதா.?

எங்கே என் நெஞ்சை கொஞ்சம் கிழித்து பார்?

அது தொலைந்து போன தடம் தெரியும்..

நீ இல்லாமல் நான் இந்த பூமியில் நடை பிணமாக தானே வாழ்கிறேன்..

என் அன்பே சீக்கிரம் வா..!

காத்துகொண்டு இருக்கிறேன் கடைசியாக உன் முகம் பார்த்த இடத்தில் - ++கல்லறை++

எழுதியவர் : நரி (6-Nov-12, 6:36 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 258

மேலே