உண்மை சுடும்- சில நேரங்களில்

சங்க இலக்கிய திருடர்கள்
சினிமா கவிஞர்கள்
எனும் உண்மை
நக்கீரன் கூற்று...
யாருக்காகவும்
எதற்காகவும்
வளைவதில்லை என் கருத்து...

மூச்சிறைக்க பேசினாலும்
முகம் சுளிக்க திட்டினாலும்
மூர்க்கமாக வாதிட்டாலும்
முன் சொன்ன கருத்தில்
நான் பின்வாங்குவதில்லை...

வைரமுத்து வரிகள்
வைர வரிகளா?
ப.விஜய் வரிகள்
தங்க வரிகளா?
நா.முத்துகுமார் வரிகள்
வெள்ளி வரிகளா?
யுகபாரதி வரிகள்
பித்தளை வரிகளா?
சிநேகன் வரிகள்
ஈய வரிகளா?

வரிகளுக்கு உலோகம்
எதற்கு?
சிந்தனைக்கு விலங்கு
எதற்கு?
கண்மூடி தனமாய்
கருத்தை திருடுவதும்
குற்றம் தான்...

கடலை களவாடி
கவிதை...
காற்றை கரிபூசி
கவிதை...
நிலவை நிர்மூலமாக்கி
கவிதை...
வானை வசைப்பாடி
கவிதை...
நிறங்கள் நீர்த்து போக
கவிதை..
அமைதியை அழவைத்து
கவிதை...
மனிதனை மறக்கவைத்து
கவிதை...
நீர், நிலம், நதி, நெருப்பு,
கண், காது, மூக்கு, தொண்டை,
முகம், மனம், என்று ஏகப்பட்ட
கவிதைகள்...

மனிதத்தை மறந்தவன்
கவிஞனா?
யார் கவிஞன் என்று
கூறுங்கள்...
உண்மை வலிக்கும்
சிலநேரங்களில்....

எழுதியவர் : தா. நாகலிங்கம் (8-Nov-12, 3:10 pm)
பார்வை : 318

மேலே