கவிதை தேடல்
ஒரு கவிதையை எழுதிவிட்டு
ஏங்கும்- அடுத்த கவிதைக்கு மனம்.......
தொடரும் காகிதமும் பேனாவும்
என்னுடன் எப்போதும்....
கருத்தேடியே அலையும் சிந்தனை.............
எழுத துவங்குகையில் முட்டிமோதி பின்
முற்றுப்புள்ளிகளில் ஓர் மன அமைதி
எந்த வார்த்தைகளிலும் செந்தமிழ் தேடல்......
மூளைக்குள் ரீங்காரமிடுகிறது
அநீதிக்கு எதிராய் கோபப்பட செய்யும்
சமுதாய கவிதைகள்......................
மீண்டும் மீண்டும் நல்லகவிதைக்காய்
தேடல்கள் தொடர்கிறது
எழுதுகையிலும் வாசிப்புகளிலும்............
மறுத்தாலும் மனசு மட்டும்
விமர்சனங்களுக்கு ஏங்கத்தான் செய்கிறது......
-------( நவ்ரோஸ் )