தேவதைகள் ஒருமுறை தான்...

தேவதைகள்
மீண்டும் மீண்டும்
பிறப்பதில்லை !
நீயோரு தேவதை
உன் பெற்றோர்க்கு !
உலகங்கள்
எழு என்று
அறிந்துள்ளோம்
ஏழிலும் தேடினோம்
உன் போல் உண்டாவென்று ?
தோல்வி தான்.
எங்கள் மனமென்னும்
அரசவையில்
வீற்றிருக்கிறாய்
அழகிய சிம்மாசனத்தில்
கம்பீரமாய்
யெளவன சுந்தரியாய்
என்றென்றும்
கோலோச்ச
இறைவன் அருள்
மழைபோல் கிடைக்க
எங்கள் உளம்கனிந்த
வாழ்த்துக்கள் !!