இறந்த பின் புகழ்ந்தால் புரியுமா !!
இறந்த பின்னால் கேட்க முடியாது
இரங்கலை இப்போதே பாடுங்கள் !
இறந்த பின்னால் பார்க்க முடியாது
கோடி துணியை இப்போதே போடுங்கள் !
கடைசியாக சவரம் செய்திடும் தொழிலாளரை
அழையுங்கள் இப்போதே நன்றி சொல்ல !
ஊருக்கு உரைக்க பறை கொட்டும் தோழரை
கூப்பிடுங்கள் முகம் பார்த்து கொள்ள !
ஊரெல்லாம் பூக்கள் கொட்ட வேண்டாம்
பிணத்திற்கு பூ மணம் தெரியுமா !
புகழ் வதை இப்போதே புகழுங்கள்
இறந்த பின் புகழ்ந்தால் புரியுமா !