மாவீரர் கல்லறையை கழுவி விட்டுபோ !
மேகமே
மாவீரர் கல்லறையை
கழுவி விட்டுபோ !
ஈழம்
ஒவ்வொரு மாவீரர்
கால்கள் பட்ட இடம்தான்
பூ வே சிந்தி விட்டு போ !
அலைகளோடு
ஆடிய பிள்ளைகள்தான்
கடலே தாலாட்டு !
நெல்லுக்கு உரம்
போட்டோம்
மண்ணுக்கு உயிர்
போட்டோம்
துப்பாக்கி தானே எங்கள்
விளையாட்டு !