இளமையின் வேகம் (விழிப்புணர்வு கவிதை)
கட்டுக்குள் அடங்க
காமம்
அவனுக்கு
பல பெண்களிடத்தில்,
விபச்சாரி
விபரமாக
சொன்னாள்.
ஒரு தொடுதலில்
ஆணுறை
அணிந்து வா என்று,
ரத்தத்தின் வேகம்
இச்சையின் சத்தத்தை
அதிகமாக்கியது
சித்தமும்
வேலை செய்யவில்லை
என்ன செய்து விடுமென்ற
(இளமை)திமிரில்
முடிந்தது.
அவசர அவசரமாக திருமணம்
முன்னோர்களின் (பெற்றோர்கள்)
உந்துதலால்
சில வருடங்களில்லே
சிதறியது (பிரிந்தது )
அவனது உயிர்
உயில் எழுததா சொத்து
மனைவிக்கும் மகனுக்கும்
மரணம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
