பெண்ணே நீ செத்து கொண்டு மற்றவர்களை வாழ வைக்கிறாய்
அந்தி மயங்கிடிச்சு
அடி வானம் சிவந்திடுச்சு
ஆலம் விழுதினிலே
கிளியெல்லாம் அடைஞ்சிடுச்சு
ஆறும் அடங்கிடிச்சு
ஆடு மேய்ஞ்சு திரும்பிடுச்சு
ஆனை கூட ஒளிஞ்சிடுச்சு
காலை கருக்கலிலே
நாத்து நட போன பெண்ணே
சேத்து வயல் எல்லாம்
சிரித்தபடி உழைத்தவளே
வீட்டு வேலை எல்லாம்
தலைக்கு மேலே இருக்குதடி
வீதியிலே உன் சத்தம்
இன்னும் கேட்கலையே
விரைவாக வந்துவிடு
வெளி வேலை முடிஞ்சுதுன்னா
வீட்டு வேலை தொடங்கனுமே