உன்னால் திருட முடியாது

உரிமைக்காகப் போராடலாம்
அதில்
வெற்றியும் அடையலாம்
ஆனால் ...
உரிமையை விற்ற
பிறகுதான் ..

கடலில் வாழும்
மீன்களின் கண்களைப்
பிடுங்கலாம் .
அதன் நீச்சலை
கற்க முடியாது
என்றும் ..

என்னை வெட்டலாம்,அடிக்கலாம்
கொய்யலாம், பறிக்கலாம்..
ஆனால் ..
நீ விதையாக முடியாது
என்றும் ..

பாறைகளில் அலைகள்
மோதலாம் .
ஆனால் ...
அதன் ஓசைகள்
பாறைகளாக முடியாது
என்றும் ..

தேனைத் தருவதில்லை
நம்மால்..
அதனைத் திருடலாம் ..
அதன் கலைத் திறமையான
உழைப்பைத் திருட முடியாது
என்றும்..

நெருஞ்சிமுள் காட்டுக்குள்
படை எடுக்கின்றன
குளவியும், வண்டும் ..

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-Nov-12, 12:33 am)
பார்வை : 146

மேலே