மனிதரில் இத்தனை நிறங்களா ?

நமது தேவையை
நன்குணர்ந்து
நாம் கேட்காமலே
உதவும் பெருந்தன்மை
உடையவர்கள்
பழம் நழுவிப் பாலில்
விழுந்தது போல
தெய்வத்திற்கு நிகரான
மனிதரே !

"மெழுகு வர்த்தி சூட்டில் இரும்பு இளகாதது போல "
இவர்களைப் போன்றவர்கள்
கல் நெஞ்சம் படைத்தவர்கள் ..
வருடக் கணக்கனாலும்
இவர்களிடம் அணுக முடியாது.

"வாங்கும் கை வம்சத்தில் உண்டு
கொடுக்கும் கை கோத்திரத்திலும் இல்லை "
என்பது போல ...

சிலர் எல்லா இடத்திலும் கடன் பெறுவர்.
முழுமையாக செலுத்திய வரலாறு உண்டோ ?
இல்லை. இவர்களும்
மனிதநேயமிக்கவரோ ?

எழுதியவர் : செயா ரெத்தினம் (17-Nov-12, 1:44 am)
பார்வை : 196

மேலே