தூரதேச கனவு பயணம்
தூரதேச கனவு பயணம்
சிறகொடிந்த அன்னப்பறவை நான்
என் கால்களோ இன்று வலியால்
வலிமையிழந்து தட்டுத்தடுமாறி
இடறி விழச்செய்கிறது தெளிவிழந்த
என் விழிகளோ அவை காண்பவை
அனைத்தும் கருப்பு வெள்ளை
நிறமாகவே ஏனோ,,பதிகிறது
யாருமில்லாத மருத்துவ மனை
வெராந்தாவும் என்னையே முறைத்து
பார்ப்பதை போல் ஒரு மாயை
கூவித்தேயும் என் தொண்டைக்குழியோ
தண்ணீரில்லாமல் வற்றி போயிருக்கிறது
மருந்து வாசங்களுடன் கூடிய என்
தனிமை இரவுகளோ ஒரு மரண
தண்டனை குற்றவாளியை போல்
மனப்போராட்டம்தனை ஏனோ நடத்தி
கொண்டிருக்கிறது,,,இருள் நிறைந்த
என் எண்ணங்களோ அஸ்தமனமாவதற்கு
நாட்களை தேடிக்கொண்டிருக்கிறது
அசுரக்காற்றில் அடித்து திரும்பும்
ஜன்னல் கதவுகளை நெட்டித்து
விழித்துப்பார்கிறேன் ஆங்கே
வெளியில் யாரோ அரக்கர்கள்
இருவர் என்னையே உற்றுப்
பார்ப்பதாய் உணர்கிறேன்,,உயிருக்கு
அஞ்சி ஓட நினைக்கும் என்
கால்களதை யாரோ இறுகப்
பிடித்திருக்கிறார்கள்
என்னகம் முழுவதும் கீழிருந்து
மேலாய் உறைபனிபோல் தணிந்துக்
கொண்டே வருகிறது,,வாய்
திறக்கவிடாமல் செய்யும் சில
தேவதைகள் அழகாய் சிரித்த
வண்ணம் பட்டாம்பூச்சிகளாய்
எனை சுற்றி சுற்றி வருகிறார்கள்
மின்விசிறிகளும் மின்விளக்குகளும்
அணைந்து அணைந்து எரிந்து எதோ
ஒரு ராட்சஸ அச்சுறுத்தல் நிகழ்வுகளை
என்னுள் இடைவிடாமல் நிகழ்த்தி
கொண்டுதான் இருக்கிறது,,,
என் கண்கள் லேசாய் மேல்நோக்கி சாய
என் கால்கள் இப்போழுதேனோ தரையில்
படாமல் நானும் மிதக்கிறேன் ,,,ஆம்
இப்பொழுது என்னில் வலியில்லை
நடக்கிறேன் ,,,சிறகுகளும் இல்லை
இருந்தும் பறக்கிறேன்,,,போகிறேன்
அதோ அங்கே ஒரு திவ்யரதத்தில்
என்னை வா வா என்று அழைக்கும்
உன்னத உடையணிந்த அந்த
கந்தர்வர்களிடம் நிரந்தரமாய் நான்
உறக்கம் விழித்து பார்க்கையில்
அதே ஹாஸ்பத்தரி வாசம்
அதில் இன்னும் உயிரோடு
நான்,,,ஆகா ஒரு அழகான
உலகத்தை அல்லவா இழந்து
விட்டேன்,,இனி போகும்
நாளதை எண்ணி தேயும்
சராசரி மனிதன்தானா
நான் ஹா ஹா ஹா ஹா
அனுசரன்