அம்மா என் அம்மா

அம்மா அம்மா,,,,,,
கலையாத கனவாய் எனக்குள் நீ
மறையாத பொக்கிசமாய் எனக்குள் நீ
நான் கண்மூடித் துங்கையிலே தன் உறக்கம்
தொலைத்தவளே அம்மா உனக்கு ஆயிரம் கோடி
நமஸ்காரம் .......................அம்மா என் அம்மா ,,,

அம்மா உன் நினைவை என்னால்
மறக்க முடிவதில்லை......முடிந்தால்
அது என் மரணத்தில்.....அம்மா என் அம்மா ,,,,

அம்மா அம்மா
உன் ஏக்கம் இன்னும் ஏன்
ஓயவில்லை ???
பத்து மாதங்கள் என்னை சுமந்தவளே
நான் உன்னை எவ்வளவு காயப்படுத்தி இருந்திருப்பேன் அம்மா என் அம்மா......
எனக்காக நீ முற்றும் திறந்தாயே
உன் ஆசை,பாசம் ,,,,,
ஏன் எனக்காக உன் உறக்கம்,உன் வாழ்கையே
மார்றிக்கொன்டையே அம்மா என் அம்மா.....

என்னை பிறந்தவுடன் தொட்டனைத்த இந்தக் கை
ஓய்ந்து ஒரு நாள்கூட நான் கண்டதில்லையே,,,,

என் வாய் முனகல் கேட்டால்கூட ஓடிவந்துவிடுவாயே.....இன்று கத்திக்கதருகிறேன்
எழுந்து வரமாட்டாயா அம்மா என் அம்மா.....

நீ எங்கு சென்றாலும் என்னை கூட்டிச் சென்றாயே நான் உன்னைவிட்டு தவிப்பெநேன்று
இன்றுமட்டும் என்னை தவிக்கவிட்டு கல்லறைக்குச் சென்றுவிட்டாயே அம்மா என் அம்மா ,,,,,,
அம்மா அம்மா
என் கனவிலும் நீ தான் என்
நினைவிலும் நீ தான்..... அம்மா
உன்னுடன் வாழ்ந்த உலகமே எனக்கு
சொர்க்கமாய் இருந்தது,,
இன்று அது எனக்கு நரகமாய் மாறிவிட்டது அம்மா என் அம்மா ......

அதனால் என் உயிர் திறந்துவிட்டேன் அம்மா என் அம்மா ...உன்னை சுமக்கும் பாக்கியம் எனக்கு
கிடைக்கவில்லை அம்மா என் அம்மா,,,
கிடைத்தது உன் காலடி தடம் பதித்த இந்த
மண் அதிலே எனக்குக் கல்லறை கட்டிச்
சுமக்கிறேன் அம்மா என் அம்மா,,,,,,
இந்தச்சுமை எப்போதும் உனக்கு இடாகாது அம்மா என் அம்மா.......


பிழை இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே
சின்னத்துரை பார்த்தீபன்

எழுதியவர் : சின்னத்துரை பார்த்தீபன் (21-Nov-12, 9:51 am)
Tanglish : amma en amma
பார்வை : 206

மேலே