ம. ரமேஷ் சென்ரியு

புகையும் சிகரெட்
மறுகையில் பாதி மது
கர்ப்பவதி

பரவச நிலையில்
சாமியார்கள்
அருகில் பெண்கள்

கொடுங்காமத்துள்
ஒளிந்துகொண்டிருக்கிறது நட்பு
நண்பர்கள் காதலர்களானார்கள்

மறக்க முடியவில்லையென்று
பொய் பேசுகிறார்கள்
காதலர்கள்

பொய்ப் பேச்சு
யாரும் கண்டுகொள்ளவில்லை
அரசியல் மேடை(யில் முழக்கம்)

எழுதியவர் : கவியருவி ம. ரமேஷ் (22-Nov-12, 8:59 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 128

மேலே