புத்தி என்கிற தீபம்
வெற்றியாளர்கள்
சோம்பி இருப்பதில்லை
என்றுமே !
மின்னுவதில்லை
மின்மினிப் பூச்சிகள்
குந்தும் போது மட்டுமே !
புத்தி கூர்மை
அணைகிற
தீபம் போல
மனிதன்
சோம்பியிருக்கும் பொழுது !
உருண்டு
வளரும்
கிளைகளை
உதிர்க்கும்
சாதித் தேக்கு
மேல் நோக்கியே ..
கண்டறிவதே
இலக்கை
அடைவதற்கான
வழிகள்
நம்மாலே !
வரும்
பகை
தானாகவே ..
பெறவேண்டும்
நட்பை
தேடியே !!!
விடிந்த போது
கேட்டது
சேவல்
எப்போது
விடியும்
என்று ..!!
என்னை ஏன்
தண்ணீரில்
விடுகிறீர் !
கரை தானே
உலகம்
எங்களுக்கு
என்றதாம்
நதி !!!