முதிர் கன்னி ?

பருவம் வந்து பலநாள் ஆச்சு
பாவிமக சோகக்கத தீரலையே
யார் யாருக்கோ மாலை போடுறாங்க
எனக்கு யாரும் போடலையே !
மல்லிகப்பூ கடையில பார்த்தே (ன்)
வாங்கிதர யாரும்மில்ல
கூவிக் கூவி வித்துப் பார்த்தும்
வாங்கி போக யாருமில்லை !
பெத்தவங்க வெறுத்தாக்கா – இந்த
பாவி மனசு என்னாகும்?
நா சிரிச்சு நாளாச்சி
நாலு வருஷம் போயாச்சி
சொந்த சோகம் போகலியே...!
ஏ (என்) வயசுப்
பொண்ணுக்கெல்லாம்
பல குழந்தை பிறந்தாச்சு
அண்ணி, சித்தி வந்தாச்சி
ஆசை அத்தான் வரவில்லையே !
ஊரெல்லாம் கேக்குறாங்க
உனக்கென்னா கேடானு ?
வந்து பாத்த மகராசன் -
வரதச்சன கொண்டுகிட்டு
வாரதுன்னா வர சொல்றான் !
பொண்ணா நா பொறந்ததால
தப்பா என்ன பாக்குறாங்க
சோக கத எப்ப மாறும்
கண்ணு தண்ணி எப்ப தீரும் ?
சாமி கண்ணு தொறக்கலனா
ஊமத்தங் காய் எனக்கு
அடுத்த ஜென்மம் கொடுக்குறத
தடுக்க இங்க யாருமில்ல !!