சமூகப் போர்க்களம்

புறப்பட்டேன் போருக்கு,
புரையோடிய சமூகஅவலங்களை களைத்தெறிய,
கங்கணம் கட்டிக்கொண்டு,
முதல் ஆளாய் ஒரு பெரும்படையுடன்,
தோல்வி வரும்வரை தெரியவில்லை,
தோற்கடித்த பருந்து விழிகள்,
எனக்குப்பின்னே வந்தவைதாம் என்று,
எதிரி நேரடியாய் மோதுகிறான்,
எதிரியாய் நினைப்பவன்.............
உடனிருந்தே கழுத்தறுத்து கதைமுடிக்கவே பார்க்கிறான்!!
சும்மாவா சொன்னார்கள் கண்ணா இது "கலிகாலம்".............

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (23-Nov-12, 10:55 pm)
பார்வை : 95

மேலே