குருட்டு பிச்சைகாரன்

அம்மா நான் கண்யில்லாத கபோதி
ஒரு குருட்டு பிச்சைகாரன்
குரல் எழுப்பி செல்கின்றான் !
தட்டுகின்ற டப்பாவில்
கொட்டுகின்ற சில்லரைகள் !

அனுதாப காசுகளா
அவனுக்கு விழுந்தவை யெல்லாம் ?
இல்லை
ஆண்டவனே
எனக்கு கண் யிரண்டும் உண்டு
இவனுக்கு இல்லை என்பதாலா ?

குருட்டு பிச்சைகாரனே !
உனக்கு கண் மட்டும்தான் குருடு
இங்கு
உள்ளத்தால் குருடாகி போன
உத்தமர்கள் ஏராளம் !

உன்னால் இந்த உலகில் நடக்கும்
உழல்களை கண்கொண்டு
காணமுடியாது கண்டிப்பாய்
இதற்க்கு நீ
சந்தோசிததுககொள் !

உன்பிச்சை பாத்திரத்தை கூட
பிடுங்கி செல்லும் பித்தலாட்டக்காரர்கள்
இங்கு உண்டு !
அவர்களின்
திருமுகத்தை
உன் ஒரு முகத்தால்
காண முடியாதற்கு
களிப்படைந்துகொள் !

உனக்கு கண்மட்டும்தான் இல்லை
இங்குவாழும் பலருக்கு
மனிதனுக்கு தேவையான
மற்ற எதுவுமே இல்லை
மகிழ்ந்துகொள் !

எழுதியவர் : (25-Nov-12, 1:42 pm)
பார்வை : 165

மேலே