எழுத்து நண்பர்களே - எனது குடும்பம் இதுதான்...!

புன்னகைத்தோம் அப்போது
புகைப் படக் கருவி எங்களை
பூந்தோட்டமாய் பார்த்தது ......!

செல் போனின் கன்னத்தை
செல்லமாக கிள்ளினேன் - அது
சிணுங்கியபடி என்னை பார்த்து
சிரித்தபடி கண்ணடித்தது.....!

கோணல் புத்தியை நேராக்கு
குடும்பத்தோடு இருக்கிறாய் என்றது ...!

அடப் போடி எனச் சொல்லி
அவள் சிம்மில் அன்பை பார்த்தேன்.......!

அங்கே......

கடந்தகால சொந்த பந்தங்கள்
நிகழ காலமாய் சிரித்தபடி.......

மீண்டும் தாயன்பு கிடைத்தது
மனைவி அருகில் இருந்தாள்.....!!!

மீண்டும் நான் குழந்தையானேன் - என் பெண்
குழந்தைகள் என்னை அரவணைத்தபடி ...!!!

தமிழையும் உறவென காட்சியில் சேர்ப்பதற்கே
தந்தேன் இக் கவியை யாம் உமக்கு......!!!!

நல்ல குடும்பம் பல்கலை கழகம் என்பர்....!!!!

நான் சொல்வது என்னவென்றால்

நல்ல குடும்பம் இனிய தமிழ் கவிதை......!!!!

இனித்திருக்கும் - சிரித்திருக்கும்
இதயம் நாளும் - மகிழ்ந்திருக்கும்

விண் சொர்க்கம் வீட்டினுள் குடிபுகும்...
விரும்பி வந்து தெய்வம் விருந்து கேட்கும்...

வசந்தம் வாசல் அமைக்கும்
வரும் காலம் தோரணம் கட்டும்

தென்றல் தோழமையாகும்....
திசையெங்கும் குயில் கூவும்......

ஐம்புலனில் ஆனந்தம் வைத்தே...
இல்லறத்திலேயே தவமுனி ஆவேன்...

என் கடமை செவ்வென செய்தே
என் பிறவிக் கடல் நான் கடப்பேன்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Nov-12, 2:12 pm)
பார்வை : 597

மேலே