வளரச்செய்த காதல்

உன் கூந்தல் மீது
சூரியனை சுற்றி வரும்
பூமிக்கும் காதல் வந்துவிட்டது...
நீ உறங்கும்போது மட்டுமே
தன்னால் கூந்தலோடு
உறவாட முடிவதால்,
அந்நேரங்களில்,
உரத்தை உபரியாய்
உனக்கே தெரியாமல்
உன் தலைக்குள் புதைத்துக்கொண்டிருக்கிறது...
நீ எழுந்து நின்றாலும்
உன் கூந்தல் நீண்டு வந்து
அதனை முத்தமிடும் வரை
இதையே செய்துகொண்டிருக்கும்...