உலகம் அழியப்போகிறதாம்...!!

கொஞ்சம் மனம் மாறுவம்
உலகம் அழியப்போகிறதாம்...!!
டயட் என்றும் டயபற்றிக் என்றும்
வாயூற ஊற மனதை கட்டுப்படுத்திய
சாப்பாட்டை இன்னிக்கே சாப்பிடுங்க..!!!
O/L Exam எழுதும் மாணவர்களே
Paper correction செய்ய யாருமே
இருக்கமாட்டாங்க ஜாலியா எழுதுங்க..!!!
கட்டுகட்டா காசு வச்சிருக்கிறவங்க
நோட்டு நோட்டா எங்களுக்கும் தாங்க
ஒரு மாதத்தில நீங்க சொர்க்கம் போவீங்க...!!!
யாரிட்ட இவ்வளவு நாளும் நாக்கபிடுங்கிறமாதிரி
கேள்வி கேட்கணும்னு இருக்கிறீங்களோ
பயப்பிடாதீங்க மனம் திறந்து விளாசுங்க...!!!
சொல்லா காதலை இவ்வளவு காலமும்
மூட்ட மூட்டயா சுமந்தது போதும்
அடிச்சாலும் பரவாயில்ல Open பண்ணிருங்க..!!!
யாரிடமாவது கோபமா பேசியிருந்தா
அவங்களுக்கு Party குடுத்து
மன்னிப்பு கேளுங்க நானும் வாரன்...!!!
மனதில் நிறைவேறாமல் இருக்கும்
ஆசைகள இன்றே நிறைவேற்றுங்க
யாரிட்டயும் அடிவாங்கமா...!!!
கடைசில உலகமே அழியலன்னா
இதெல்லாத்தையும் மீள் பரிசீலனை செய்யுங்க
நான் வாரன்...... !!