பிரார்த்தனைகள் (ருத்ர நாகன் அவர்கள் தந்தைக்கு)

நாம் வாழும் உலகில்
துன்பங்களும் துயரங்களும்
துரத்துகின்றன !
இதில் இருந்து மீளவே
நாம் செய்கிறோம்
பிரார்த்தனைகள் !!

எல்லோருடைய
பிரார்த்தனைகளையும்
நிராகரிப்பதில்லை
கடவுள் !

கடவுளிடம்
இரண்டு கைகளை ஏந்தி
யாருக்காக நாம்
பிரார்த்தனை செய்கிறோமோ
அவர்களை வெறும் கைகளாகத்
திருப்பி அனுப்புவதில்லை
கடவுள் !ஆகவே ..
நாம் இடைவிடாமல்
செய்யும் பிரார்த்தனைகள்
கடவுள் காதில் விழும் !

அந்த நம்பிக்கையோடு
நாம் அனைவரும்
நண்பர் ருத்ர நாகன் அவர்கள் தந்தை குணம் பெற
வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்வோம் !
எந்த சிக்கலும் இல்லாமல்
எந்த இடையூறும் இல்லாமல்
நலம் பெற வேண்டி பிரார்த்திப்போம்
நாம் அனைவரும் !!

எழுதியவர் : செயா ரெத்தினம் (26-Nov-12, 9:26 pm)
பார்வை : 314

மேலே