நினைவுகளில் அவளைத் திட்டிவிட்டேன்
நாட்கள் நகர்கிறது இதயத்தில் தஞ்சம் கொண்ட காதலுடன்!
நினைவுகளின் கதறல்கள் என் காதினில் கேட்கிறது!
மீண்டும் பழைய நாட்களுக்கே எடுத்துச் செல்கிறது உன் ஞாபகங்கள்!
அன்று காதலுடன் நான் காத்துக் கிடந்த இடங்கள்!
இன்றும் அவ்வண்ணமே இருக்கிறது என்னையும் அவளையும் தவிர!
அன்று நீ பார்த்தப் பார்வைகள் எல்லாம் காதல் என்று ஏமாந்துப் போனவன் நான் ஞாபகம் இருக்கிறதா?!
நான் எழுதிய கவிதைகளை மொக்கை என்று உன் உதடுகள் சொன்னது உன் கண்கள் ரசித்ததை நான் பார்க்கவில்லை என்று நினைத்தாயா?!
உன் தோழிமார்கள் கூட்டத்தில் ஒழிந்துக் கொண்டு நான் உன்னைத் தேடுவதை ரசிக்கவில்லை என்றாய்!
அடிப் பாவி நீ ரசிக்கத் தானே நான் நடித்தேன் என்பது உனக்கு தெரிந்தும் இல்லை என்றது எனக்கு தெரியாதா?!
எனக்காக காத்திருந்துவிட்டு நான் ஏன் உனக்காக காத்திருக்கிறேன் என்று நீ கூறிய பொய்யை அழகாக ரசித்தப் பாவி நான் தான் தெரிகிறதா?!
காதல் விளையாட்டில் என்னிடம் தோற்றுவிட்டாய் உன் இதயத்தை என்னிடம் இறையாக்கி!
மூன்றான்டுக் காதல் அழகாய் சிறகடித்துத் திரிந்து முடிந்தது!
அழகாக திருமணமும் நடந்தது உனக்கான ஒருவனாய் வேறு ஒரு ஆண்!
எனக்கான ஒருவளாய் உன் நினைவுகள் மட்டும்!
அன்று நான், நீ பிரிந்த பின் கேட்க நினைத்த கேள்விகளை இன்று என் நினைவுகளில் வந்துக் கேட்டுவிட்டேன்!
என் ஞாபகம் உனக்கு இருந்தால் உன் நினைவுகளில் வந்துக் கேட்டுப் பார்!
உன் முதல் பார்வை மட்டும் பார்க்காமல் இருந்திருந்தால் நான் கவிஞன் ஆகி இருக்கமாட்டேன்!
நன்றி என்னை கவிஞன் ஆக்கியதற்கு. . . .
நினைவுகளுடன்
-கார்த்திக் pgr