மெழுகுவர்த்தி
தாமரையில் ஒளிந்திருக்கும் புதையல்-அதை
பக்குவமாக பாதுகாத்த ஒரு மாடப்புறா
என் பார்வையில் விழுந்தாள் -நான் இசைத்தேன்
அவள் வெட்கம் திறந்து கொட்டியது சிரிப்பு
கைகளால் பொத்திய இனிப்பை -அவள்
கண்கள் காட்டி கொடுத்தது - பாவம்
அதற்கு நடிக்க தெரியவில்லை - அடடா
அவள் மென்மை நூலில் நான் தைத்தேன் ஒரு கை குட்டை
இடம் கொடுத்தால் படித்துவிடுவான் என்று பயந்தவள்
வில்லை தூக்கி வீரத்திமிர் காட்டினாள்
நான் மேலும் மயங்கினேன் - இன்னும் காதலித்தேன்
அவள் வில் உடைந்து பயத்தால் கெஞ்சியது "என்னை பார்க்காதே" என்று
என் வெயில் தாங்காத அந்த பனிக்குயில் - தாண்டி
ஓரடி பறக்குமுன் பற்றினேன் பன்னீர் பூக்களை
உதறித்தள்ள மனமில்லாத அந்த ஓவியத்தின் பெண்மையால்
தாளங்கள் மறந்து நின்றது அவள் சிற்றிடை
என் கைகளை கொஞ்சம் சாந்தப்படுத்தினேன்
ஓவியமோ நூலறுந்த பட்டம் போல் பறந்துவிட்டது
என் ஆண்மையின் சிரிப்பு அட்டகாசம் புரிந்த வேளை
ஓவியம் என் தூரிகை நனைக்க வெட்கத்தால் தயங்கி நின்றது.
தயக்கத்தில் காதல் பாடுமோ! தாமதத்தால் அவள் நினைவும் போகுமோ!
நீரில் பொத்திவைத்தேன் அவள் நினைப்பை
நெஞ்சு நிமிர நீந்திக்கொண்டிருந்தேன்
அதுவோ பூப்பந்துபோல நான் நீந்தும் வழியில்
ஒட்டி ஓடமான கதைகள் இங்கே!!
பந்திற்கு சொந்தமான ரதியை வாட்டாமலும்
அதை தூக்கி எறிய மனவலிமை இழந்தும் நீந்திகொண்டிருந்தேன்
கரை கண்ட வெற்றியுடன் ஓவியத்திற்கு தூரிகையாக
அவள் சுயம்வரம் சென்றேன்
அவள் நினைப்போ என்னிடம் இல்லை - இன்னொரு
தூரிகையால் மெழுகப்பட்ட அவள் இதயம்
தலை குனிந்து மொழி சொன்னது
என் காதல் மெழுவர்த்தி காற்றிக்கு பணிந்தது - ஆனாலும்
என் மனக்கடலில் ஒடப்பந்து இன்னும் மூழ்காமல் மிதக்கின்றது !