வாழ்த்துக்கள் என்று
மீன் பிடித்து மீண்டும் மீண்டும்
நாரை காலைத் தூக்கி
சலாம் போட்டது
குளத்தைப் பார்த்து
வாழ்த்துக்கள் என்று ...
வலை போட்டு மீன்
பிடித்தவனைப் பார்த்து
இடுப்பக் காட்டி
salute அடித்தது
வாத்து
வாழ்த்துக்கள் என்று ...
பட்டாசு வெடித்ததைப்
பார்த்து பயந்து
கோழி கொட்டாவி
விட்டு சொன்னது
வாழ்த்துக்கள் என்று ...
மழையைக் கண்டு தன் (மணல் )
உடலுக்குள் புகுந்த
நண்டுகள் எல்லாம்
வணக்கம் சொன்னது
அலைகளைப் பார்த்து
வாழ்த்துக்கள் என்று ...
புயலின் வேகம் குறைந்தது
என்றெண்ணி
சுனாமி பேயெல்லாம்
ஊளையிட்டுச் சொன்னது
வாழ்த்துக்கள் என்று ...
பேய் ,பிசாசு வர
நேரமாகிடுச்சு
போய் தூங்குங்க இல்ல
அதுங்க பயந்து
நமக்கு சொல்லும்
வாழ்த்துக்கள் என்று ...