ரொமான்ஸ் ரகசியம்......!!!!!!!
பாடங்களில் இதை படிக்கவில்லை ...!
படங்களில் காணத்தவறவில்லை..!
நண்பர்களிடமும் கேட்க முடியவில்லை....!
தனிமையில் கனவில் போட்ட திட்டங்களுடன் பொழுது இனிமையாய் சென்றிட
மயங்கிப்போனேன் பலநொடி....!!!
ஆனால் அன்று அவள் சென்ற விதம் .....
கண்கள் பளிச்சிட
கன்னங்கள் சிவந்திட
கரங்களும் தனிச்சையாய் தடதடக்க
உதடு மட்டுமின்றி உதிரம் முழுதும் துடிக்க
கட்டித் தழுவ முயன்ற என்னை
பூவிரலால் புறம்தள்ளி
நாணத்துடன் நழுவப்பார்த்தாள்...!!!
காதல் பொங்கிய அக்கணத்தை
கலைக்க மனமில்லாமல் நான்
மீண்டும் அவள் கரம் பற்ற.....
அவள் திரும்பி மின்னல் தெறிக்கும்
பார்வையில் என் கண்கள் பறித்தாள்..!!
"அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்.."
சட்டென இதயம் வாசிக்க
விருட்டென விழித்துக்கொண்டேன் கனவிலிருந்து ....!!????
இது தான் ரொமான்ஸா...??????????????????