நம் கருவறை தெய்வம்
நம் இருதயத்தின்
உயிர் துடிப்பில்
சத்தமானவள்
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்
உச்சரிக்கும் முதல் ஸ்லோகம்
கருவறையில் இருந்து வெளியேறி நாம்
கண் திறந்து பார்த்த முதல்
கடவுள்
நம் சரிரத்தின் ரத்த ஓட்டம்
நம் இரு கண்களின் சுடர் ஒளி
நம் தமிழ் எழுத்தின் முதல் எழுத்து
நம் பிறப்பிற்க்கு மூலப் பொருள்
நம் உயிரின் ஆதி
நம்மை இந்த உலகத்தில் நடமாட செய்தவள்
நம் உயிர் பிரசவிக்க அவள் உயிர் வலி உணர்ந்தவள்
நாம் வளர்ந்த பிறகும் இன்னும் குழந்தையாகவே
நம்மை பாவிப்பவள்
அம்மா ! அம்மா ! அம்மா
பூக்களின் இதழ்களை விட
தாய்மையின் மனது மிக லேசானது