என் பசி

சேமித்த பணத்தின் மிகுதியால் வலியுற்று
நோயை போக்க தினமும் காலை
நடைப்பயிற்சி செய்யும் மனிதா..!

செய்த பாவத்தின் மிகுதியால் வருந்தி
பாவம் போக்க நிதமும் வேதனையுடன்
கோவில் செல்லும் மனிதா...!

நீ செல்லும் பாதையில் தினமும்
கையேந்தும் எம்போன்றவர்க்கு உணவிடு
எங்கள் நிறைவு உனை வாழவைக்கும்.

இதை தினமும் நீ செய்தால் - உன்
மனமோ நிறையும் உளமோ மகிழும்-என்
வயிறும் நிறையட்டும் ஒருவேளையாவது....

எழுதியவர் : சிவா(எ)விஜய் (29-Nov-12, 4:09 pm)
சேர்த்தது : Siva K Gopal
பார்வை : 148

மேலே