காதல் நிருபி

* உயிரும் உலகமும்
பொய்யெனச் சொல் - என்
உறவும் பொய்யென
ஒப்புக் கொள்கிறேன் .

* ஆண்டவனும் அகிலமும்
பொய்யெனச் சொல் -என்
அன்பும் பொய்யென
ஒப்புக் கொள்கிறேன் .

* நீரும் நிலமும்
பொய்யெனச் சொல்- என்
நிழலும் பொய்யென
ஒப்புக் கொள்கிறேன் .

*காலமும் நேரமும்
பொய்யெனச் சொல் -என்
காதலும் பொய்யென
ஒப்புக் கொள்கிறேன் .

எழுதியவர் : bhanukl (30-Nov-12, 7:44 pm)
பார்வை : 166

மேலே