மாறாத வடுக்கள்
சமுத்திரத்தை போல்
விரிந்து இருக்கிறது வடுக்கள்
இவை காயங்களில்லை,ரணங்கள்.
மீட்சியற்றதோர் அதிகாரத்தின் கீழ்
சுவடுகள் தெரியும்
வாழ்வின் எச்சங்கள் .
அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல
எதுவுமில்லை ........,
இந்த பிச்சைப்பாத்திரங்களை தவிர !
அவர்களின் கனவுகளுக்காக
உள்ளுக்குள் பிரார்த்திக்க மட்டும் முடிகிறது
யாருக்கும் கேட்காத படி .
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை

