ஏழை குழந்தைக்கும் தெரியவில்லை இங்கிதம்

குழந்தை
திருவிழா கடையில்
வளையலை காட்டி
வாங்கிதா என்றது.

தந்தையோ சொன்னார்
போன வாரம் வாங்கிய
வளையல் இருக்குதில்ல
அப்புறமா எதுக்கு

குழந்தையும் விடவில்லை
இரண்டு கையையும் காட்டி
இருந்த போடாம வருவேனா
சொல் அப்பா என்றதே

வீ ட்டிலிருந்தால் அடித்திருக்கும் கை -ஏனோ
ஆசையாய் அணைத்து சென்றது .

ஏழை தந்தைக்கு தெரிந்த இங்கிதம் -ஏனோ
குழந்தைக்கு தெரியாமல் போனது.

எழுதியவர் : bhanukl (30-Nov-12, 9:51 pm)
சேர்த்தது : பானுஜெகதீஷ்
பார்வை : 170

மேலே