சிந்தனைகளம்

எல்லையற்ற வானத்தை போல மனித மனதில் எழும் சிந்தனைகளும் எல்லை அற்றவைதான்.

அன்பு என்ற அலை எழுந்து விட்டால் ஆழி பேரலையும் காலளவு தான் .

சுயநலம் கொண்டவனின் சிந்தனை சுற்றி இருப்பவனை சுரண்டிக் கொண்டே இருக்கும்.

செடியிலே சிரிக்க விட்டு மலரின் அழகை
ரசிக்க மனம் வேண்டும்.

வாழ்க்கை என்பது உதிரும் மலரல்ல உதிர்ந்த மலரையும் கோர்த்து மாலையாக்குவது தான் .

சுற்றிலும் தன்னை செதுக்கி கொள்ளும் வரை வலியை பொறுத்தால் தான் கல்லை கடவுள் என்று கையெடுத்து கும்பிடுவார்கள்.

மறக்க மனமிருந்தால் குற்றங்கள் நம்முன் குறைந்து போகும்.

நல்ல குணமுள்ளவனின் குடிசையும் கூட கோபுரமாய் காட்சியளிக்கும்

நிலவிலும் கால் வைக்கலாம் தூண்டுகோலாய் துணை இருந்தால்

மனம் குப்பை நிரப்பும் கூடையில்லை .வெற்றிடம் இருந்தால் விதைப்பது விருட்ஷமாகும்

காலம் என்பது அதிஷ்டமில்லை
அது ஒரு அனுபவ வாசல்.

பொறுமை இருந்தால் நீரையும் சல்லடையில் சலிக்கலாம்

தொடரும் .......சிந்தனைகளம்

எழுதியவர் : bhanukl (3-Dec-12, 8:42 am)
பார்வை : 163

மேலே