யார் அழுவார்!

நான் இறக்கும் போது எனக்கென
யார் அழுவார்..
உற்றவனோ மற்றவனோ
சொந்தமோ பந்தமோ
அழுதால் மட்டும் போதும் என
நினைத்தால் போதுமா
எனக்கு போதாது
நேரங்கள் அழ வேண்டும்
பணங்கள் அழ வேண்டும்
தினங்கள் அழ வேண்டும்
மனிதர் மனங்கள் அழ வேண்டும்
இயற்கை அழ வேண்டும்
ஏழுதுகோல் அழ வேண்டும்
ஏழுத்துகள் அழ வேண்டும்
இயற்கயால் படைக்கப்பட்ட
விதைக்கப்பட்ட
அனைத்துமே அழ வேண்டும்
ஏனென்றால்
இனி அவற்றுடன்
நான் உறவாட முடியாததனால்!!
மனிதனை விட அவனை
சுற்றி உள்ளவை நம்மை
எளிதில் புரிந்துகொள்ளும்...,