வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

அந்த ஞானியிடம்
அவன் கேட்டான்-
“நான் செய்யும்
காரியங்கள் அனைத்தும்
தோல்வியிலேயே முடிகின்றன.
வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?”
அவனை
ஆற்று நீருக்குள்
அழைத்துச் சென்றார் ஞானி
கழுத்து வரை
தண்ணீருக்குள் செற்றதும்...
அவன் கழுத்தைப் பிடித்து
அப்படியே நீருக்குள்
அமுக்கினார்
துடியாய் துடித்த அவன்
உயிர் போகும் தருவாயில்
அமுக்கும் அவர் கைகளை
திமிறிக்கொண்டு தள்ளினான்
தண்ணீருக்கு வெளியே
தலையைத் தூக்கியதும்
காற்றைச் சுவாசித்து
மீண்டும் உயிர் பெற்றான்...
அப்போது அந்த ஞானி
அவனிடம் கேட்டார்-
“உயிர் போகும் தருவாயில்
உனக்கு என்ன தோன்றியது...?”
அதற்கு அவனோ-
“சுவாசிப்பதற்கு
காற்று கிடைக்காதா..?
கடும்பாடு பட்டேன்
தண்ணீருக்குள் அமுக்கும்
உமது கைகளிலிருந்து
விடுபடத் துடித்தேன்..
வெற்றிப் பெற்றேன்”
அந்த ஞானியோ
சிரித்துக்கொண்டு...
“இனி நீ செய்யும் காரியங்கள்
உனக்கு வெற்றியே தரும்..போ”
என்று சொல்லி
அவனது காதில்
வெற்றி மந்திரத்தை ஓதினார்.....
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்.....குறள்-(666)