நீங்கதான் நல்ல அப்பா
குழந்தை எழுப்புகிறான் அப்பாவை ...
"என்னடா குழந்த ' என்கிறார் அப்பா .கண்களை கசக்கிக் கொண்டு ...
;நீங்கதான் ரொம்ப நல்ல அப்பா ' என்றான் குழந்தை .
'இதுக்காகவா எழுப்பினே ' என்றார் அப்பா .
'அந்த அப்பா ரொம்ப கேட்ட குணம் பிடிச்ச அப்பா 'என்றான் குழந்தை .
'எந்த அப்பா ' என்றார் அப்பா .
'போன ஜென்மத்து அப்பா ' என்றான் குழந்தை .
'போன ஜென்மத்து அப்பாவா !!!!என்றார் அப்பா.
'ஆமா' என்றான் குழந்தை .
'யாரு அவர் ' கேட்கிறார் அப்பா .
'மகாராஜா' என்கிறான் குழந்தை .
'நீ போன ஜென்மத்தில மகாராஜா பிள்ளையா?'கேட்கிறார் அப்பா .
'சகல கலா மகாராஜா ' என்றான் குழந்தை
'உம் பேரு ' கேட்கிறார் அப்பா .
'அசுரன் ' குழந்தை சொல்கிறான்.
'எங்கேயோ கேட்டாப்ள இருக்கு ? அவர கெட்ட குணம் புடிச்சவருனு சொல்ற ?என்றார் அப்பா .
'என்ன காட்டுக்கு விரட்டினார் 'என்றது குழந்தை.
'ஏன் ?' என்றார் அப்பா .
'நான் அரண்மனையில இருந்த ரதத்தை வீதிகள் தோறும் ஒட்டிய போது ,அங்கு விளையாடிய குழந்தைகளை நான் தூக்கி ஆத்துல போட்டேன் .அதக் கண்டு கையைக் கொட்டி சிரிப்பேன் ...ஜோரா இருக்கும் ..!
போக்குவரத்துக்கு இடைஞ்சலா இருந்த குழந்தைக்கள நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கல ...அதான் ....
உடனே அப்பாகிட்ட எல்லாரும் , 'என் குழந்தைய கொன்னுட்டியாட பாவி? ன்னு எல்லாரும் அலறினாங்க .அதனால ஒரு நல்ல அப்பாவுக்குப் பிள்ளையா பொறக்கனும்னு தவம் இருந்தேன் . இரண்டு வருடம் கழித்து சிவன் காட்சி தந்தார். கலயுகத்திலே நல்ல அப்பாவுக்கு பிள்ளையாய் பிறப்பாய்னு சொல்லி மறைந்து விட்டார்.
"நீங்க தான் அந்த நல்ல அப்பா " என்றான் குழந்தை .
'சரி !!சரி !! 'என்ன பண்ணி என்ன ஆகப் போகுது .!!!