பாலியல் நோயுற்ற குழந்தை
கூட்டத்தில் என்னை ஒதுக்குகிறார்கள் பலர்
என்னை கண்டால் தூற்றி செல்கிறார்கள் சிலர்
எந்த பாவமும் நானறியேன்
எந்த பாவமும் நான் செய்யேன்
சமூகமே என்னை ஒதுக்காதே என்று
கண்ணீர் சிந்தட்டுமா!- இல்லை
நான் நிரபராதி என்று உங்கள்
காலில் வந்து விழட்டுமா!
தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்க
முன்வருவோர் எவருமிலர்,
கண்ணீர் சிந்தி நான் அழுதாலோ
அரவணைப்போர் இங்கு இல்லை,
பாவம் அறியான் நானென்றாலும்
பாவியாக பார்க்கின்றது இவ்வுலகம்,
எனக்குள் இருக்கும் இதயத்தின்
வலியுணர்வோர் இங்கில்லையா?
எனக்கும் ஆசைகள் இருக்காதா?
நான் முன்னேற கூடாதா?
நானும் ஓர் குழந்தையே!