மனமே மயங்காதே ?

மனமே மயங்காதே ஒரு மாற்றம் உருவாகும்
கனவே காணாத பொன் உலகம் உருவாகும்
சங்கே அடங்காதே ஒரு சங்கமே உருவாகும்
எங்கே மதிக்காத பொன் தங்கமே விலையாகும்

போக போக வேக நெஞ்சம் விவேகமாகும்
பழகப் பழக பாரமனமும் பலமாகும்

போராடி போராடி வாழ்வு ஒரு தேரோட்டம்
கல்லடி பல்லடி சொல்லுக்கு ஏன் இந்த ஆட்டம்


மனமே சற்று நில்லு
தினமே ஒரு சொல்லு

இந்த காலம் நிற்காது
சொந்தம் பந்தம் நிலைக்காது ?

தேடல் நேரம் தேயிந்திடும்
கடல் தினமும் படகுத் தேடும் ?

போன நேரம் கிடைக்காதா ?
வந்த நேரம் நிலைக்காதா ?

ஏன் இந்த காலம் நிலையான பாதம்
காட்ட வில்லை ?
கண் திறந்த நேரம் பலமான பாலம்
கட்ட வில்லை ?

என்று நினைத்து நினைத்து உன் கனவை
கண்ணாடி சிலைப்போல் உடைத்து
பொன் மனதை சிதறிவிடாதே

சாக்கு சொல்வதில் பல போக்கு காணலாம்
வாக்கு வெல்வதில் சில கொக்கு காணலாம்

புல்லு தின்ன ஆட்டுக்கு கசாப்பு கடைனா ?
ஆட்ட தின்ன மனிதனுக்கு ஆப்பு கடைனா ?

குருடனும் குறுக்கு வழிய புழைக்க பார்க்கிறான்
மூடனும் இருக்க சோம்பேறிய பிழைக்க
வா என்றான் ;

எதிரிகளை எதிர்த்து நின்றால் காலமோ
நம்மைப் புகழும் ;
உழைப்போ உழைத்து வென்றால் புகழோ
நம்மைச் சேரும் ;

எழுதியவர் : கவிஞ்ர் வேதா வே.தாமோதரன் (5-Dec-12, 5:28 pm)
சேர்த்தது : kavinghar vedha-v.dhamodharan
பார்வை : 216

மேலே