..........ஆணவம்.............

சிலநேரம் சுருக்கென்று பேசிவிடுகிறேன்,
வெடுக்கென்று ஓடிவிடுகிறாய் முகத்தை மூடிக்கொண்டு,
பிற்பாடு,
உனை போராடி சமாதானம் செய்தபின் சொல்கிறாய்,
"முகத்தில்கூட அடி முகதிலடித்தார்போல் பேசாதே"
உணர்ந்து உறைகிறேன் முகம் கருத்த நான்,
என் அகம் அசிங்கப்பட்டு.........................

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (7-Dec-12, 10:27 am)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 181

மேலே